புதுச்சேரி

கோப்பு படம்.

புதிய சட்டசபை கட்டிடம் கட்ட இந்த ஆண்டு பூமிபூஜை-முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

Published On 2023-03-31 10:37 IST   |   Update On 2023-03-31 10:37:00 IST
  • மத்திய அரசு உதவியோடு அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுவையை முன்னேற்றுவோம்.
  • புதிய சட்டப்பேரவை கட்டவேண்டும் என்ற எண்ணம். அதற்கு விரைவில் முடிவு எடுக்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

மத்திய அரசு உதவியோடு அதிக நிதி பெற்று சிறந்த முறையில் செலவிட்டு புதுவையை முன்னேற்றுவோம்.கேள்விகளுக்கு நிறைவான பதில்களை அமைச்சர்கள் தந்துள்ளனர்.

புதுவையை பொருத்தவரை கடந்த ஆட்சிக்காலத்தில் நிர்வாக சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும். அதை கொண்டு வந்தால்தான் விரைவாக எண்ணங்களை செயல்வடி வில் கொண்டு வரமுடியும். பிரச்சினைகளை தீர்க்க நிர்வாக சீர்திருத்ததுக்கு அரசு கவனம் செலுத்தும்.

புதிய சட்டப்பேரவை கட்டவேண்டும் என்ற எண்ணம். அதற்கு விரைவில் முடிவு எடுக்கப்படும். வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் புதிய சட்டப்பேரவை கட்ட பூமிபூஜை போடப்படும்.

அரசின் 10 ஆயிரம் காலி பணி இடங்கள் காலியாக இருந்தது ஒவ்வொரு துறைவாரியாக நிரப்புகிறோம். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த ஆட்சி காலத்தில் பணியில் அமர்த்தப்பட்டு அரசு சம்பளம் வாங்கியிருந்து கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்தால் திரும்பவும் வேலை தரப்படும்.

மறைந்த பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, புதுவை செல்லாநாயக்கர், தியாகு முதலியார் ஆகியோர் பிறந்த நாள், நினைவு தினம் அரசு விழாவாக எடுக்கப்படும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

Tags:    

Similar News