புதுச்சேரி
கோப்பு படம்.
பாரதியார் பல்கலைக்கூடத்தில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு
- அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசை, நாட்டியம், நுண்கலை துறைகளில் இளங்கலை படிப்புகள் நடத்தப்படுகிறது.
- இந்த ஆண்டு முதல் முதுகலை பட்டப்படிப்பை தொடங்க புதுவை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசை, நாட்டியம், நுண்கலை துறைகளில் இளங்கலை படிப்புகள் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் முதுகலை பட்டப்படிப்பை தொடங்க புதுவை பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. முதுகலை படிப்பில் சேர பல்கலைக்கூட அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 12-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருப்பம் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கூட நிர்வாகம் தெரிவித்துள்ளது.