புதுச்சேரி

கோப்பு படம்.

பயனாளிகளுக்கு உதவ வேண்டும்-அதிகாரிகளுக்கு கவர்னர் தமிழிசை உத்தரவு

Published On 2023-03-03 05:18 GMT   |   Update On 2023-03-03 05:18 GMT
  • புதுவை மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், பால் உற்பத்தி, மீன்வள மேம்மாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
  • மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும், கால்நடை வளர்ப்பு திட்டங்களில் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், பால் உற்பத்தி, மீன்வள மேம்மாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.

கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார்.தலைமை செயலர் ராஜுவ் வர்மா, கால்நடை பராமரிப்புத்துறை செயலர் உதயகுமார், மீன்வளத்துறை செயலர் கேசவன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி மற்றும் கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை, பாண்லே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கால்நடை வளர்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அவற்றின் செயலபாடுகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தவும், கால்நடை வளர்ப்பு திட்டங்களில் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற வழிமுறைகளை கண்டறிய வேண்டும். மத்திய அரசின் கால்நடை அபிவிருத்தி, சுகாதார திட்டங்களில் செலவு செய்யாத தொகையை பயனாளிகள் பயன்பெறும் வகையில் குறித்த காலத்தில் செலவு செய்ய வேண்டும்.

மத்திய அரசின் கடன் மற்றும் மானியம் பெறுவதற்கான வாய்ப்பு களை பயனாளிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

புதுவையில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தி பாண்லே பால் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் பால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.

புதுவையில் கடல்வாழ் உயிரின காட்சியகம், அறிவியல் அரங்கம், கடல் மீன்கள் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும். மீன் கண்காட்சியை நடத்த வேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை பேசினார்.

Tags:    

Similar News