அம்பேத்கர் சிலையை அழகுபடுத்தும் பணியை அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பார்வையிட்ட காட்சி.
ரூ.5½ லட்சத்தில் அழகுபடுத்தும் பணி-அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கு அ.தி.மு.க. பாராட்டு
- புதுவை அருகே உப்பளம் துறைமுக நுழைவு வாயில் அருகில் உள்ள அம்பேத்கர் சிலையை சுற்றி இருந்த தடுப்பு சுவர்கள் முழுமையாக சேதம் அடைந்தன.
- முதல்-அமைச்சருக்கும் அ.தி.மு.க. சார்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உப்பளம் துறைமுக நுழைவு வாயில் அருகில் உள்ள அம்பேத்கர் சிலையை சுற்றி இருந்த தடுப்பு சுவர்கள் முழுமையாக சேதம் அடைந்தன.
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிலையை சுற்றி நீரூற்று, மின்விளக்கு மற்றும் அழகிய சிமெண்ட் தடுப்பு கட்டைகள் அமைக்க பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் அ.தி.மு.க. கோரிக்கை வைத்தது.
கோரிக்கையை ஏற்று ரூ.5½லட்சம் மதிப்பீட்டில் இந்த பணிகளை செய்ய அரசு ஒப்பந்தம் விட்டுள்ளது. பணியை விரைந்து முடிக்க உதவிய அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கும், முதல்-அமைச்சருக்கும் அ.தி.மு.க. சார்பில் மனமார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.