புதுச்சேரி
கோப்பு படம்.
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் பவித்ர உற்சவம்
- உற்சவருக்கு விசேஷ திரு மஞ்சனமும், மாலையில் அனுக்சை மற்றும் மிருத்சங்கரணமும் நடைபெறுகிறது.
- கருடசேவை, பூர்ணாஹுதி, சாற்றுமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டு தோறும் பவித்ர உற்சவம் நடைபெற்று வருகிறது.
அதன்படி 52- வது ஆண்டு பவித்ர உற்சவம் வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ திரு மஞ்சனமும், மாலையில் அனுக்சை மற்றும் மிருத்சங்கரணமும் நடைபெறுகிறது.
2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை தினமும் 120 திருவாராதனமும், 5-ந் தேதி கருடசேவை, பூர்ணாஹுதி, சாற்றுமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.