புதுச்சேரி

கோப்பு படம்.

கடல் அரிப்பை தடுக்க தூண்டில் முள் வளைவு-கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-03-29 10:36 IST   |   Update On 2023-03-29 10:36:00 IST
  • கனகசெட்டி க்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.
  • ஆலங்குப்பம், காலாப்பட்டு பகுதிகளில் பாதாள சாக்காடை திட்டம் கொண்டு வர வேண்டும்.

புதுச்சேரி:

மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

கனகசெட்டி க்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலைகளை அகலப்படுத்த வேண்டும், என்.சி.சி.ஆர். திட்டத்தின் கீழ் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் முள் வளைவை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை ஊழியர்கள் புதுவையில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காலாப்பட்டு தொகுதியை சேர்க்க வேண்டும். ஆலங்குப்பம், காலாப்பட்டு பகுதிகளில் பாதாள சாக்காடை திட்டம் கொண்டு வர வேண்டும். சுற்றுலாத் துறை மூலமாக காலாபட்டு தொகுதிக்கு ரூ. 1000 கோடிக்கு விரிவான திட்டம் கொடுக்க வேண்டும். 26 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட ஆலங்குப்பம் கிராம சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

காலாப்பட்டு கடற்கரை பகுதிகளில் சாகச விளையாட்டுகளை கொண்டு வர வேண்டும். காலாபட்டில் கடற்கரை திருவிழா நடத்த வேண்டும். மீனவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம், மானிய விலையில் மீன்பிடி உபகரணம் வழங்க வேண்டும. காலாப்பட்டில் மீன்பிடி துறைமுகத்தை உடனே அமைத்து தர வேண்டும். அடுத்த ஆண்டு அரசு டைரி வழங்க வேண்டும்.

சட்டப்பல்கலை அமைய நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அங்கு புதுவை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். தண்டனை முடிந்துள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News