புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவமனையில் மனநல வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி.

பிம்ஸ் மருத்துவமனை சார்பில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-10-10 10:07 IST   |   Update On 2023-10-10 10:07:00 IST
  • மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கிழக்கு கடற்கரை சாலை கனகசெட்டிகுளம் முதல் காலாப்பட்டு வரை நடைபெற்றது.
  • கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை வகித்தார்.

புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவமனையில் உலக மன நல வாரத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கிழக்கு கடற்கரை சாலை கனகசெட்டிகுளம் முதல் காலாப்பட்டு வரை நடைபெற்றது.

முன்னதாக பிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை வகித்தார்.

மனநல மருத்துவ துறை தலைவர் டாக்டர் பிரதீப் திலகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக டாக்டர் வித்யா ராம்குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணியில் செவிலியர் கல்லூரி மற்றும் மருத்துவம் சார்ந்த பாராமெடிக்கல் கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன்,மனநல மருத்துவர் சூசன்சாலமன் செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர் கல்லூரி துணை பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்க்கான ஏற்பாடுகளை மனநல மருத்துவதுறை சமூக சேவகர் மெல்பின் செய்திருந்தார்.

Tags:    

Similar News