புதுச்சேரி
மகளிர்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஹீமோகுளோபின் பரிசோதனை நடத்தப்பட்ட காட்சி.
கோர்க்காடு கிராமத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு
- ஹீமோகுளோபின் பரிசோதனை நடத்தப்பட்டு பெண்களுக்கு ஆலோசனை மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டது.
- டாக்டர் மின்மினி பொதுமக்களுக்கு மகளிர் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
புதுச்சேரி:
கரிக்கலாம்பாக்கம் அருகே கோர்க்காடு துணை சுகாதார நிலையத்தில், மகளிர்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஹீமோகுளோபின் பரிசோதனை நடத்தப்பட்டு பெண்களுக்கு ஆலோசனை மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், டாக்டர் இந்திரா, டாக்டர் மின்மினி பொதுமக்களுக்கு மகளிர் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஊர் முக்கியஸ்தர் தேவிந்திரன், கிராம சேவகர்கள் நாராயண், சாவித்திரி, குமாரசெல்வி கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியை சூர்யோதை அறக்கட்டளை யின் மண்டல மேலாளர் ஜெயராஜன், மதுபாலன் மற்றும் பிரியங்கா ஏற்பாடு செய்தார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.