புதுச்சேரி

கல்லூரியின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது வழங்கப்பட்ட காட்சி.

ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது

Published On 2023-09-07 09:53 IST   |   Update On 2023-09-07 09:53:00 IST
  • கர்நாடகா கல்வியில் விருது என்ற நிகழச்சியை நடத்தி இந்த விருதை வழங்கியது.
  • இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் ஆகியோர் வாழ்த்தினையும், பாராட்டினையும் துறையின் டீனுக்கு தெரிவித்தனர்.

புதுச்சேரி:

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம் ,சென்னை ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பல்வேறு செயல்பாடுகளின் சிறப்புகளை அங்கீகரிக்கும் வகையில் விருதுகளும் அவற்றுக்கு உறுதுணையாக சிறப்பாக பங்காற்றிய துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் .செந்தில்குமாருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது

ஒய்.இ.எஸ். அறக்கட்டளை என்ற அரசு சாரா அமைப்பானது சமீபத்தில் பெங்களூருவில் கர்நாடகா கல்வியில் விருது என்ற நிகழச்சியை நடத்தி இந்த விருதை வழங்கியது.

விருதுகளை பெற்றமைக்காக பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் ஆகியோர் வாழ்த்தினையும், பாராட்டினையும் துறையின் டீனுக்கு தெரிவித்தனர்.

துறையின் பேராசிரியர்களும் வாழ்த்தினை தெரிவித்தனர்.

Tags:    

Similar News