புதுச்சேரி

யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூக்கு கவர்னர் தமிழிசை விருது வழங்கிய காட்சி.

சிறந்த இளம் வயது சமூக சேவகருக்கான விருது-கவர்னர் தமிழிசை வழங்கினார்

Published On 2023-01-08 06:20 GMT   |   Update On 2023-01-08 06:20 GMT
  • சென்னையை அடுத்து ள்ள மாமல்லபு ரத்தில் தமிழ் ரத்னா விருது 2022 வழங்கும் விழா நடைபெற்றது.
  • இதன் மூலம் இவர்கள் புதுவைக்கு பெருமை சேர்ப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என தெரிவித்தார்.

புதுச்சேரி:

சென்னையை அடுத்து ள்ள மாமல்லபு ரத்தில் தமிழ் ரத்னா விருது 2022 வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சமூக நலனுக்காக பணியாற்றிய சேவகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

புதுவையை சேர்ந்த யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூக்கு சிறந்த இளம் வயது சமூக சேவகருக்கான 'யுவ ரத்னா 2022' விருது வழங்கப்பட்டது. விருதை வழங்கி பேசிய கவர்னர் தமிழிசை, பிளாஸ்டிக் இல்லாத புதுவையை உருவாக்கிட கிருஷ்ணராஜூ திறம்பட செயல்பட்டு வருவதாகவும், இதேபோல் பிரதமர் மோடியின் திட்டமான காசநோய் இல்லா பாரதத்தை உருவாக்குவோம் என்பதை நிறைவேற்றும் விதமாக யுவர் பேக்கர்ஸ் மிகப் பெரிய பங்காற்றி வருகிறது.

இதன் மூலம் இவர்கள் புதுவைக்கு பெருமை சேர்ப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது' என தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ, ' தாங்கள் எனக்கு விருது வழங்கியதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேசமயம் விருதிற்காக மட்டும நான் சேவை செய்யவில்லை , மக்களு க்காகவும் இளைய சமுதாயத்தினருக்கும் சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்கி கொடுப்பது எங்கள் கடமையென உழைத்து வருகிறோம்' என கூறினார்.

Tags:    

Similar News