புதுச்சேரி

கோப்பு படம்.

அண்ணன் பணம் கடன் வாங்கிய தகராறில் தம்பி மீது தாக்குதல்

Published On 2023-07-10 10:08 IST   |   Update On 2023-07-10 10:08:00 IST
  • திருமணம் செய்து கொண்டு தனது தம்பி ஜெயந்தனுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
  • ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் சுபாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கையாளும், தடியாலும் தாக்கினர்.

புதுச்சேரி:

திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த வர் ஜெயந்தன்(வயது24). டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் விக்னேஷ். இவர் திருமணம் செய்து கொண்டு தனது தம்பி ஜெயந்தனுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

கடந்த 8 மாதத்துக்கு முன்பு விக்னேஷ் குடும்ப சூழ்நிலை காரணமாக ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை விக்னேஷ் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ராஜேசுக்கும், விக்னேசுக்கும் தகராறு இருந்து வந்தது.

மேலும் நேற்று இரவு ஜெயந்தன் வீட்டில் இருந்த போது ராஜேசும் அவரது நண்பர் சுபாசும் ஜெயந்தன் வீட்டுக்கு வந்தனர். அப்போது விக்னேஷ் வாங்கிய பணத்தை ஜெயந்த னிடம் கேட்டனர். அதற்கு ஜெயந்தன் அந்த பணத்தை தனது அண்ணனிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

இதனால் ராஜேசுக்கும், ஜெயந்தனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் சுபாஷ் ஆகிய இருவரும் சேர்ந்து ஜெயந்தனை கையாளும், தடியாலும் தாக்கினர்.

இதுகுறித்து ஜெயந்தன் திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News