புதுச்சேரி

 லாசுப்பேட்டை உழவர் சந்தையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு லாசுப்பேட்டை உழவர் சந்தையில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகத்தை வைத்தியநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார். 

மணக்குள விநாயகர் கோவிலில் புதுவை காங்கிரசார் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

Published On 2023-06-19 14:30 IST   |   Update On 2023-06-19 14:30:00 IST
  • ஏழைகளுக்கு நலத்திட்டம் வழங்கி கொண்டாட்டம்
  • தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும் நடந்தது.

புதுச்சேரி:

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு இன்று பிறந்தநாளாகும். ராகுல்காந்தி பிறந்தநாளை நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிசார் கொண்டாடினர்.

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் இன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மணக்குள விநாயகர் கோவிலில் ராகுல்காந்தி பேரவை சார்பில் அவர் நீடூழி வாழ வேண்டி, தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.

தொடர்ந்து புதுவை ரெயில்வே நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதியில் உள்ள தர்காவில் சிறப்பு தொழுகையும் நடந்தது.

நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தி யநாதன் எம்.எல்.ஏ, ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலன், அனந்தராமன், நீலகங்காதரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அப்துல் ரகுமான், தனுசு, இளையராஜா,

எஸ்.எம்.ஏ.கருணாநிதி, காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் வினோத், திருமுருகன், பிரதீஷ், பாபுலால், ராஜகுமார் தியாகராஜன் ஈரம் பவுண்டேஷன் ராஜேந்தி ரன, வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், ஆனந்த் பாபு, ராகுல்காந்தி பேரவை தலைவர் ஆர்.இ.சேகர், வக்கீல் பிரிவு தலைவர் மருது பாண்டியன், வக்கீல்கள் ராமலிங்கம் பாலமுருகன், சாரதி கார்த்திகேயன், ஜார்ஜ, செந்தில், முத்து, சார்லஸ், ஜோசப் சகாயம், ஆல்பர்ட், கிஷோர், மஞ்சினி, கோபால் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து வட்டார காங்கிரஸ் சார்பில் ரத்ததானம், அன்னதானம், மாணவர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கி கொண்டா டப்பட்டது.

Tags:    

Similar News