புதுச்சேரி

பைக்கில் செல்லும் சிவசங்கர் எம்.எல்.ஏ.

புதிய கார் வழங்கப்படாததால் பைக்கில் சென்று மக்கள் பணியாற்றும் எம்.எல்.ஏ.

Published On 2023-07-14 13:51 IST   |   Update On 2023-07-14 13:51:00 IST
  • பிரதமர் மோடியின் அபிமானியான சிவசங்கர் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற பிறகு பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.
  • இவருக்கு அரசு வழங்கிய கார் பழுதடைந்து பல நாட்களாக ஆகியும் புதிய கார் இவருக்கு வழங்கப்படவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆளும் கட்சியினர் நடந்து கொள்கிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவராக இருந்தவர் சிவசங்கர். தற்போது இந்த கூட்டமை ப்பின் பெருந்தலைவராக உள்ளார். மேலும் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் முதன்மை துணை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

புதுவையில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவில் சீட் கேட்டிருந்தார். சீட்டு கிடைக்காததால் உழவர்கரை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணியில் உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்கி ரசுக்கு ஒதுக்கப்பட்டது.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பன்னீர்செ ல்வத்தை எதிர்த்து சிலிண்டர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டி யிட்ட சிவசங்கர் வெற்றி பெற்றார்.

 இவரை எதிர்த்துப் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி டெபாசிட் இழந்தது. பிரதமர் மோடியின் அபிமானியான சிவசங்கர் எம்.எல்.ஏ. வெற்றி பெற்ற பிறகு பா.ஜனதா  

எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இந்நிலையில் சிவசங்கர் எம்.எல்.ஏவுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டது. மிகவும் பழமையான கார் என்பதால் அவ்வப்போது இந்த கார் பழுது ஏற்பட்டது.

இந்தக் காரை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கொடுத்து சரி செய்ய சொன்னபோது இந்த கார் வாங்கி 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும் இந்த கார் ஓட்ட தகுதியற்ற வாகனம் எனவும் கூறிவிட்டனர்.

அவ்வப்போது இந்த கார் என்ஜினில் பழுது ஏற்பட்டு தீ பிடிக்கும் நிலையும் உருவானது. இது தொடர்பாக சிவசங்கர்

எம்.எல்.ஏ. சபாநாயகர் மற்றும் முதல்-அமை ச்சரிடம் தகவல் தெரிவித்தும் அவருக்கு மாற்று வாகனம் வழங்கப்படவில்லை.

இதனால் சிவசங்கர் எம்.எல்.ஏ. சட்ட மன்றத்திற்கும், உழவர்கரை தொகுதியில் நடக்கும் அரசு நலத்திட்ட நிகழ்ச்சி களுக்கும், தொகுதியில் பொது மக்களை சந்திப்பதற்கும், அவர் தனது சொந்த பைக்கில் செல்கிறார்.

இதுகுறித்து தொகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், சுயேட்சையாக போட்டியிட்டு மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்றவர் சிவசங்கர் எம்.எல்.ஏ.மேலும் இந்திய அளவில் வணிகர் சங்க சம்மேனத்தின் பொறுப்பா ளராகவும் உள்ளார்.

தினந்தோறும் மக்கள் பணிகளை மேற்கொள்ள கூடியவர். இவருக்கு அரசு வழங்கிய கார் பழுதடைந்து பல நாட்களாக ஆகியும் புதிய கார் இவருக்கு வழங்கப்படவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஆளும் கட்சியினர் நடந்து கொள்கிறார்கள்.

கூட்டணி கட்சியான பா.ஜனதாவின் ஆதரவு எம்.எல்.ஏ.வுக்கு புதிய கார் வழங்காத அரசு, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கும், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய காரை வழங்கியிருக்கிறது.

சிவசங்கரன் எம்.எல்.ஏ. பைக்கில் செல்லும் பொழுது தொகுதி மக்களாகிய எங்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசங்கர் எம்.எல்.ஏவுக்கு உடனடியாக அரசு நவீன காரை வழங்க வேண்டும்.

Tags:    

Similar News