கோப்பு படம்.
முதல்-அமைச்சர் அறிவித்தபடி ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்
- அரசு பணியாளர் கூட்டமைப்பு கோரிக்கை
- ரூ.18 ஆயிரம் சட்டக்கூலி வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம்.
புதுச்சேரி:
புதுவை அரசு பணியாளர் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பொதுப்பணித்துறையில் கடந்த 13 ஆண்டாக ஆயிரத்து 500 வவுச்சர் ஊழியர்கள் பணிபுரிகிறோம். இதில் 700-க்கும் மேற்பட்டோர் 40 வயதை கடந்தவர்கள். கால்நடை மருத்துவ கல்லூரியில் 83 ஊழியர்கள் உள்ளனர்.
அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஊழியர்களின் வயது, வறுமையை கருத்தில் கொண்டு பணி நியமன விதியை ஒருமுறை தளர்வு செய்து ரூ.18 ஆயிரம் சட்டக்கூலி வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம்.
இந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் சட்டசபையில் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். வவுச்சர் ஊழியர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து காலி பணியிடங்களைநிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.