பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற காட்சி.
- விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார்.
- கவியரங்கத்தில் 47 கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர்.
புதுச்சேரி:
புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
உலக சுற்றுலா பிக்னிக் நாளை முன்னிட்டு புரட்சிக்கவிஞரும் சுற்றுலாவும் என்ற தலைப்பில் நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார்.
விழாவில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார். செயலர் வள்ளி, லட்சுமிதேவி, கிருஷ்ண குமார், சசிகுமார், மீனாட்சிதேவி கணேஷ், ரமேஷ் பைரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"உலா வருவோம் உலகை!" என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் 47 கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர். 10 திருக்குறள் சொல்லும் 20 மாணவர்கள் பாராட்ட பட்டனர்.
இதைதொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசனின் நீடித்தப் புகழுக்குக் காரணம் தமிழுணர்வே! பகுத்தறிவே! என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. வேணு கோபால் நடுவராகப் பேசினார்.
தண்டபாணி, பால சுப்பிரமணியன், ஜெயந்தி ராஜவேலு, விசாலாட்சி, இளவரசி சங்கர், அன்பு நிலவன் வாதிட்டனர். முன்னதாக கவிஞர் ராஜேஷ் வரவேற்றார்.முடிவில் பிரமீளா மேரி நன்றி கூறினார்.