புதுச்சேரி

கோப்பு படம்.

புகையிலை பயன்பாடு இல்லாத பகுதியாக புதுவை அரசு அலுவலகங்கள் அறிவிப்பு

Published On 2023-07-07 13:54 IST   |   Update On 2023-07-07 13:54:00 IST
  • மத்திய சுகாதார அமைச்சகம் 2 மாதம் புகையிலை இல்லாத இளைய தலைமுறை என்ற விழிப்புணர்வை தொடங்கியுள்ளது.
  • புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்ற தகவலும் அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

புதுச்சேரி:

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோய், நுரையீரல் நோய், இருதயநோய், பக்கவாதம் உட்பட நாள்பட்ட நோய்களுக்கு புகையிலை முக்கிய ஆபத்து காரணியாகும்.

உலக சுகாதார அமைப்பின் தரவின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சத்து 35 ஆயிரம் பேர் புகையிலையால் இறக்கின்றனர். இதையடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் 2 மாதம் புகையிலை இல்லாத இளைய தலைமுறை என்ற விழிப்புணர்வை தொடங்கியுள்ளது.

வருகிற 31-ந் தேதியுடன் விழிப்புணர்வு முடிவடைய உள்ளது. இதையொட்டி புதுவை மாநிலத்திலும் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் அனைத்தும் புகையிலை பயன்பாடு இல்லாத பகுதிகளாக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி அரசு அலுவலகங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்தவும், கொண்டு செல்லவும் அனுமதியில்லை. இதுகுறித்த அறிவிப்பு பலகை நுழைவுவாயில், காத்திருப்பு இடங்களில் வைக்கப்படும். புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்ற தகவலும் அறிவிப்பு பலகையில் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News