புதுச்சேரி

கோப்பு படம்.

வாகனங்கள் வாடகை விடுவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா?-பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-03-27 08:45 GMT   |   Update On 2023-03-27 08:45 GMT
  • பயணிகள் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நகரப் பகுதியில் சுற்றி வருவது காட்சி பொருள் ஆகிவிட்டது.
  • மேலும் இது சம்பந்தமாக போக்குவரத்து காவல்துறை யினர் இந்த வாகனங்களை கண்காணிக்கிறார்களா?

புதுச்சேரி:

புதுவை சட்ட சபையில் பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. பேசிய தாவது:-

புதுவை நகர பகுதியில் மோட்டார் சைக்கிளில் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் மோட்டார் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நகரப் பகுதியில் சுற்றி வருவது காட்சி பொருள் ஆகிவிட்டது.

வாடகை விடுவதற்கு ஏதேனும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா? அதனை இந்த வாடகை விடும் நிறுவனம் அனைத்தும் முறையாக கடைப்பிடிக்கின்றனவா? அனுமதி பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பொதுவாக வாடகைக்கு விடப்படும் வாகனங்கள் அவை வாடகை வண்டி என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள மஞ்சள் நிற நம்பர் பிளேட் மிக அவசியம்.

தற்போது எந்த வாடகை வண்டியும் இந்த விதியை கடைப்பிடிப்பது இல்லை. மேலும் வாடகை விடப்படும் வாகனத்துடன் பாதுகாப்பு தலை கவசம் அந்த நிறுவனத்தால் வழங்கப்படுகிறதா?

மேலும் இது சம்பந்தமாக போக்குவரத்து காவல்துறை யினர் இந்த வாகனங்களை கண்காணிக்கி றார்களா? அல்லது இந்த வாகனங்களை கண்காணிக்க அவர்க ளுக்கு அனுமதி வழங்கப்பட்டு ள்ளதா? அவர்களுக்கு ஏதேனும் அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளதா? இதனையும் போக்குவரத்து அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் தற்பொழுது எத்தனை நிறுவனங்கள் இந்த வாடகை விடும் தொழிலுக்காக போக்கு வரத்து துறை யில் விண்ணப்பி த்துள்ளன என்பதையும் இந்த மாமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் இது சம்பந்தமாக போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை, நகராட்சி மூன்றும் இணைந்து வழிமுறைகளை உடனடியாக வகுத்து இந்த வாடகை விடும் நிறுவனங்களை ஒழுங்கு படுத்த வேண்டும்.

மேலும் நேரு வீதி மற்றும் மிஷன் வீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவை அனைத்திற்கும் போக்கு வரத்து துறை அமைச்சர் தகுந்த தீர்வை இந்த மாமன்றத்தில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News