புதுச்சேரி
பொதுக்குழுக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்ற காட்சி.
மருந்து உற்பத்தியாளர்கள் பாராட்டு
- மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
- வரவு செலவு அறிக்கை, சங்கத்தினுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் சேர்மேன் பிரமோத், தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வரவு செலவு அறிக்கை, சங்கத்தினுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது
புதுவையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா (பார்மா பார்க்) அமைப்பதற்கு உத்தரவிட்ட புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.