புதுச்சேரி

மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் தமிழறிஞர்கள் நினைவு பரிசு வழங்கிய காட்சி.

சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரிக்கு பாராட்டு விழா

Published On 2023-11-30 09:22 GMT   |   Update On 2023-11-30 09:22 GMT
  • கம்பன் கலையரங்கில் நடந்தது
  • மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரி செயலர் ராஜீவ் குமாரர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

புதுச்சேரி:

புதுவை தமிழ் ஆர்வலர்கள் மற்றும் திண்டிவனம் கம்பன் கழகம் அறக்கட்டளை சார்பில் அமுதவிழா காணும் வேரை விழுதுகள் வணங்கும் விழா இன்று காலை புதுவை கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

விழாவிற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிக்கு பாராட்டு மடல் மற்றும் நினைவு பரிசு வழங்கி ஆசி ெபற்றார்.

விழாவில் முன்னாள் சபாநாயகரும் புதுவை கம்பன் கழக தலைவருமான வி.பி. சிவக்கொழுந்து மற்றும் எதிர்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கல்லூரி செயலர் ராஜீவ் குமாரர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். மயிலம் ஸ்ரீமத் சிவன்யான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்று பேசினார். திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளை பொதுச் செயலாளர் ஞானஜோதி சரவணன் நோக்க உரையாற்றினார்.

விழாவில் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தேசிய விருதாளர்கள், தமிழ் பேராசிரியர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வாழ்த்து உரை வழங்கி மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ம் பட்டம் மகா சந்நிதானம் சிவஞான பாலய சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.

விழா ஏற்பாடுகளை விழா குழுவினரான ஆதிகேசவன், முத்து, முருகசாமி, வேல்முருகன், வேணுகோபால், நெய்தல் நாடன், துரை.ராசமாணிக்கம், கோவிந்தராசு, ரமணன், பாலசுப்பிரமணியன், சீனு மோகன்தாஸ், திருநாவுக்கரசு, ஞான ஜோதி, வேல்கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News