முன்னாள் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற காட்சி.
முன்னாள் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா
- சேலியமேடு அரசு நடுநிலைப் பள்ளியின் 4 வகுப்பறைகளுக்கு கரும் பலகைகள் வழங்கப்பட்டது.
- பக்கிரிசாமி, பழனிசாமி, ஜீவரத்தினம் ஆதிநாராய ணன், லட்சுமி, ரமணி, பத்மா, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு 1977-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் குமரவேலு தலைமையில் பள்ளி அளவில் 425 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி ரோஷினிக்கு ரூ.5 ஆயிரமும் , 410 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்த மாணவி அபிநயாவுக்கு ரூ.3 ஆயிரமும், 400 மதிப்பெண் பெற்று 3-வது இடம் பிடித்த மாணவி அனுப்பிரியாவுக்கு ரூ.2 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சேலியமேடு அரசு நடுநிலைப் பள்ளியின் 4 வகுப்பறைகளுக்கு கரும் பலகைகள் வழங்கப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன், பிரான்ஸ் கண்ணபிரான், நிர்வாகிகள் பாலசுந்தரம், தட்சிணா மூர்த்தி, அய்யனார், கனகராசு, புவனேஸ்வரன், தமிழ்வளவன் சுப்பிரமணி, விஸ்வநாதன், முரளி, கிருஷ்ணமூர்த்தி, நாகமுத்து, பக்கிரிசாமி, பழனிசாமி, ஜீவரத்தினம் ஆதிநாராய ணன், லட்சுமி, ரமணி, பத்மா, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.