புதுச்சேரி

கோப்பு படம்

null

பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு

Published On 2023-06-12 13:55 IST   |   Update On 2023-06-12 13:57:00 IST
  • புதுவை என்ற முகவரிக்கு ஜூலை 31-ந் தேதிக்கு முன்பாக சமர்பிக்க வேண்டும்.
  • அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு தகுதியான வர்களை தேர்வு செய்து பரிந்துரை செய்யும்.

புதுச்சேரி:

புதுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசின் உயர் விருதான பத்ம விருதுகள் 1954-ம் ஆண்டு தோற்று விக்கப்பட்டு, பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ என 3 வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

2024 குடியரசு தின விழாவில் அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுக்கான தகுதியாளர்கள் தேர்வு நடக்கிறது. தகுதியானர்கள் தேவையான ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி, விளம்பரத்துறை, 18 பெல்காம் வீதி புதுவை என்ற முகவரிக்கு ஜூலை 31-ந் தேதிக்கு முன்பாக சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் புதுவை மாநிலத்தை சேர்ந்த வராக இருக்க வேண்டும். அரசின் இணையதளத்திலும் விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்யலாம். அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழு தகுதியானவர்களை தேர்வு செய்து பரிந்துரை செய்யும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News