புதுச்சேரி

கோப்பு படம்.

மகளிர் மேம்பாட்டுத்துறை பணிக்கு விண்ணப்பம்

Published On 2023-08-11 14:09 IST   |   Update On 2023-08-11 14:09:00 IST
  • சக்தி சம்பால் திட்டத்தின் கீழ் புதுவையில் ஒன் ஸ்டாப் சென்டர் நிறுவப்பட்டுள்ளது.
  • ஒன் ஸ்டாப் மையத்துக்கு 28 பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

புதுச்சேரி:

புதுவை மகளிர் மேம்பா ட்டுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெண்களின் பாதுகாப்பு, மறுவாழ்வு, அதிகாரம் அளித்தலுக்கு மிஷன் சக்தி திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்து.

இத்திட்டம் சம்பால், சாமர்த்தியா என்ற 2 துணை திட்டங்களை கொண்டுள்ளது. சக்தி சம்பால் திட்டத்தின் கீழ் புதுவையில் ஒன் ஸ்டாப் சென்டர் நிறுவப்பட்டுள்ளது.

இத்திட்டம் வீடு, வேலை, சமூகம், தனியார், பொது இடத்தில் துஷ்பிர யோகத்துக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டது. பாலியல், உடல் உளவியல், உணர்ச்சி, பொருளாதார துஷ்பிரயோகத்தால் பாதிக்கும் பெண்களுக்கு அவர்களின் சாதி, மதம், இனம், வகுப்பு, கல்வி நிலை, வயது, கலாச்சாரம், திருமண நிலை பொருட்படுத்தாமல் உதவி செய்து கை கொடுக்கிறது.

புதுவையில் ஒன் ஸ்டாப் மையத்துக்கு 28 பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தகுதி, விண்ணப்பங்கள் பற்றிய விபரங்களை அரசின் இணையதள முகவரியில் பெறலாம். வருகிற 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மைய நிர்வாகி பணிக்கு ரூ.25 ஆயிரம், கேஸ் ஒர்க்கர், சோசியல் கவுன்சிலர், அலுவலக உதவியாளர் பணிக்கு தலா ரூ.15 ஆயிரம், வக்கீல் பணிக்கு ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News