புதுச்சேரி

கோப்பு படம்.

அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர விண்ணப்பம்

Published On 2023-06-27 11:38 IST   |   Update On 2023-06-27 11:38:00 IST
  • தொழிலாளர் துறை பயிற்சி பிரிவு உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
  • அருகில் உள்ள தொழில்பயிற்சி நிலையங்களிலும் நேரில் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி:

புதுவை தொழிலாளர் துறை பயிற்சி பிரிவு உதவி இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பயிற்சி நிலையங்களில் ஒன்று, 2 ஆண்டு பயிற்சி படிக்க விரும்பும், 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 1-ம் தேதி முதல் சென்டாக் இணையதளத்திலோ, தொழிலாளர் துறை இணையதளத்திலோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அருகில் உள்ள தொழில்பயிற்சி நிலையங்களிலும் நேரில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News