புதுச்சேரி

கோப்பு படம்.

முதியோர்களுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் உணவு, மருந்து வழங்க வேண்டும்

Published On 2023-12-04 08:15 GMT   |   Update On 2023-12-04 08:15 GMT
  • அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா வலியுறுத்தல்
  • மக்கள் 60 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதுதான்.

புதுச்சேரி:

புதுச்சேரி வடக்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் எஸ்.டி.சேகர் அனுமதியுடன் இணைச் செயலாளர் லாவண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த 2 நாட்க ளாக விடாது தொடர்ந்து பெய்து வருகின்றது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கவர்னரும், அரசும் கேட்டுக் கொண்டுள்ளது.

அதேசமயம் அரசு சார்பில் 211 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் வந்து தங்கும் மக்கள் 60 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதுதான். அதேசமயம் நிவாரண முகாம்களும் எங்கெங்கு உள்ளது என்ற விவரம் மக்களுக்கு தெரியவில்லை. எனவே அனைத்து அங்கன்வாடி மையங்க ளிலும் நிவாரண முகாம் களின் முகவரியை நோட்டீ சாக ஒட்ட வேண்டும்.

மேலும் வயதான முதி யோர் பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள் அங்கன்வாடி ஊழியர்க ளுக்குத்தான் தெரியும்.

எனவே 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வசிக்கும் அனைவரின் இல்லங்களுக்கும் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் நேரில் சென்று அவர்களின் நலன் மற்றும் தேவை குறித்து அறிந்து மருந்துகளும், உணவும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News