புதுச்சேரி

 கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் லட்சுமி நாராயணன், சிவசங்கரன் எம்.எல்.ஏ. விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்சி ஆனந்து மற்றும் பக்தர்களை படத்தில் காணலாம்.

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-11-24 08:36 GMT   |   Update On 2023-11-24 08:36 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்பு
  • அம்மன் ராஜகோபுரம், விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவை சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா  நடைபெற்றது.

முன்னதாக விக்னேஸ்வர பூஜையுடன் விழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. 20-ந் தேதி மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, 22-ந் தேதி காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 4-ம் கால யாக பூஜை நடந்தது.

மாலை 5-ம்கால யாக பூஜை நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, பரிவார மூர்த்திகளுக்கு பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடந்தது.

8.30 மணிக்கு அம்மன் ராஜகோபுரம், விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

விழாவில் திருப்பணிக்குழு கவுரவ தலைவரும் அமைச்சருமான லட்சுமி நாராயணன், சிவசங்கரன் எம்.எல்.ஏ. விஜய மக்கள் இயக்க தலைவர் புஸ்சி ஆனந்து, சத்யா ஜூவல்லரி சத்ய நாராயணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா விற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News