புதுச்சேரி

கோப்பு படம்.

நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை

Published On 2023-04-23 05:09 GMT   |   Update On 2023-04-23 05:09 GMT
  • முன்னாள் நீதிபதி சந்துரு பேச்சு
  • எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் கவர்னரை வைத்து ஆட்சியை எப்படி கவிழ்க்கலாம் என திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

புதுச்சேரி:

மணற்கேணி ஆய்வெளி இலக்கிய அமைப்பு சார்பில் சிறப்பு கருத்தரங்கு புதுவை தனியார் ஒட்டலில் நடந்தது.கேசவானந்த பாரதி தீர்ப்பும் அரசியலைப்பு சட்டத்தின் பாதுகாப்பும் என்ற தலைப்பில் நீதிபதி சந்துரு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-

தான் இன்னும் ஐ.பி.எஸ் என்று தமிழக கவர்னர் நினைத்துக் கொண்டிருக்கிறார். கவர்னரை கண்டித்து தீர்மானம் இயற்றும் சட்டமன்றத்தை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் கவர்னரை வைத்து ஆட்சியை எப்படி கவிழ்க்கலாம் என திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

கவர்னர்கள் மூலம் மாநில அரசின் ஸ்திரத்தன்மையை அசைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இதனால் நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உருவாகி வருகிறது. நீதிபதிகள் செல்லக்கூடிய போக்கு 2 வழிகளில் உள்ளது.அரசியலமைப்பு சட்டத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டு அதனை நம்பாமல் சிலர் அந்த அரியணையில் அமர்ந்திருக்கிறார்கள்.

துறவிகள் மாநாட்டில் வேதங்கள் ஓதுவார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி வருகிறார்கள்.பள்ளி பாட திட்டத்தில் வரலாற்றை திருத்தி எழுதுகிறார்கள்.இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற நாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை.நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை ஒருபோதும் மாற்ற விட மாட்டோம்.மோடியை விமர்சனம் செய்யும் யாரும் நீதிபதியாக அமர முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. உளவு அமைப்புகளை நம்பாமல் தற்போது அனைத்து சமூக வலைதளங்களையும் மத்திய அரசு கண்காணித்து வருகிறது.இவ்வாறு சந்துரு பேசினார்.

நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.பி, புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், பேராசிரியர் கல்விமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News