அ.ம.மு.க. தொகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
அ.ம.மு.க. தொகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
- வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- அ.ம.மு.க. வெற்றி பெறுவதற்கு சிறப்பாக பணியாற்றுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில அ.ம.மு.க. ஒருங்கிணைந்த வடக்கு மற்றும் தெற்கு மாநில தொகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வில்லியனூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தெற்கு மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான யூ.சி .ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் தொகுதியில் உள்ள வார்டு மற்றும் பூத் கமிட்டி அமைப்பது , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெறுவதற்கு சிறப்பாக பணியாற்றுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் தொகுதி செயலாளர்கள் செந்தில் என்ற குமரவேல், தனவேல், ராமச்சந்திரன், ரத்தின குமார், முருகன், அன்பழகன், செல்லா என்ற தமிழ்செல்வன், மணவாளன், பரிதி மாற்கலைஞன், கலிய மூர்த்தி, சதீஷ் கண்ணா, வேதபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.