புதுச்சேரி

பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

அம்பேத்கர் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

Published On 2023-06-27 14:05 IST   |   Update On 2023-06-27 14:05:00 IST
  • புதுவை பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் உமாபதியை சந்தித்து ஒரு மனு அளித்தார்.
  • உப்பளம் அம்பேத்கர் சாலையை விரிவாக்கம் செய்து அங்குள்ள பூங்காவை சீரமைத்து தரவேண்டும்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி புதுவை பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் உமாபதியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

உப்பளம் அம்பேத்கர் சாலையை விரிவாக்கம் செய்து அங்குள்ள பூங்காவை சீரமைத்து தரவேண்டும். மேலும் அம்பேத்கர் சிலை அருகே உள்ள நீர்வீழ்ச்சியையும் செயல்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட செயற்பொறியாளர் உமாமதி சம்பந்தப் பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலையை விரி வாக்கம் செய்து பூங்காவினை முழுமையாக புனரமைத்து கொடுப்பதாக கென்னடி எம்.எல்.ஏ.விடம் பொதுப்பணித்துறை செய ற்பொறியாளர் உமாபதி உறுதி அளித்தார்.

Tags:    

Similar News