புதுச்சேரி

அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணி சென்ற காட்சி.

அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் பிரமாண்ட சைக்கிள் பேரணி

Update: 2022-08-15 08:40 GMT
  • சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி அமலோற்பவம் மேல்நிலைபள்ளி சார்பில் பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.
  • பள்ளியின் என்.எஸ்.எஸ். குழுவினர் ஒருங்கிணைத்து நடத்திய இப்பேரணியை முதுநிலை முதல்வர் லூர்துசாமி வாழ்த்துரை வழங்கி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

புதுச்சேரி:

சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி அமலோற்பவம் மேல்நிலைபள்ளி சார்பில் பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பள்ளியின் என்.எஸ்.எஸ். குழுவினர் ஒருங்கிணைத்து நடத்திய இப்பேரணியை முதுநிலை முதல்வர் லூர்துசாமி வாழ்த்துரை வழங்கி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

அமலோற்பவம் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியில் 300-க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

புதுவையின் பிரதான வீதிகள் வழியாக சென்று 5 கி.மீ. தூரம் நடைபெற்ற இப்பேரணியில் நாட்டுப் பற்றை வளர்க்கும் விதமாக வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற வீர முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர்.

இப்பேரணியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்ததுடன் மாணவர்களோடு சேர்ந்து அவர்களும் முழக்கமிட்டும், புகைப்படம் எடுத்தும் மாணவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினர்.

Tags:    

Similar News