புதுச்சேரி

கூட்டத்தில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற காட்சி.

மாற்றுதிறனாளி சாதனையாளர்கள் விருது தேர்வு ஆலோசனை கூட்டம்-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பங்கேற்பு

Update: 2022-12-01 09:08 GMT
  • ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப் படுகிறது. புதுவை சமூக நலதுறை சார்பில் இந்த ஆண்டு நடைபெறும்.
  • விருதுக்கு உரியவர்களை இறுதி தேர்வு செய்யும் நிகழ்வு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் தட்டாஞ்சாவடியில் நடந்தது.

புதுச்சேரி:

ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப் படுகிறது.

புதுவை சமூக நலதுறை சார்பில் இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்யும் சாதனை யாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள், சிறப்பாக சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகள், அரசு துறையில் சிறப்பாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

விருதுக்கு உரியவர்களை இறுதி தேர்வு செய்யும் நிகழ்வு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் தட்டாஞ்சாவடியில் நடந்தது. இதில் சமூகநல துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் பத்மாவதி, துணை இயக்குனர், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதி, மருத்துவ அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News