புதுச்சேரி

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கோவில் செப்பேடுகளை பார்வையிட்ட காட்சி. அருகில் தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சாமிகள் உள்ளார்.

பூமிக்கடியில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்

Published On 2023-04-28 15:26 IST   |   Update On 2023-04-28 15:26:00 IST
  • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பார்வையிட்டார்
  • ஆதீனமே பராமரிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் எனவும் தெரிவித்தார்.

புதுச்சேரி:

திருக்கயிலாயப் பரம் பரை தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான சீர்காழியில் உள்ள சட்டநாத சாமி தேவஸ்தானம் திருநிலை நாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் சாமி கோவில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோவில் கும்பாபிஷேகப் பணியின் போது கோவில் வளாகத்தில் பூமிக்கடியில் இருந்து 22 பஞ்சலோக சாமி சிலைகள் மற்றும் 412 முழுமையாகவும் 84 உடைந்த நிலையில் தேவார செப்பேடு தொகுதிகள் கிடைக்கப் பெற்றன.கோவிலில் கண்டெடுக் கப்பட்ட பஞ்சலோக சாமி சிலைகள் மற்றும் செப்பேடுகளை புதுவை மாநில சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சாமிகளுடன் சென்று பார்வையிட்டு வழிபாடு செய்தார்.

பின்னர் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவிலில் கண்டெடுக் கப்பட்ட ஐம்பொன் சிலைகளும் செப்பேடுகளும் மத்திய அரசின் அனுமதி பெற்று கோவில் வளாகத்திலேயே வைத்து வழிபடவும் இவற்றை தருமபுர ஆதீனமே பராமரிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது மயிலாடுதுறை மாவட்ட பா.ஜனதா தலைவர் அகோரம் , புதுவை மாநில பா.ஜனதா துணை தலைவர் அருள்முருகன், அப்பு மணிகண்டன், சிவக்குமார் ,அறிவழகன் மற்றும் ஏராளமான பா.ஜன தாவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News