புதுச்சேரி

கோப்பு படம்.

ஏ.எப்.டி. சொத்துக்களை விற்க கூடாது-ஏ.ஐ.சி.சி.டி.யூ.வலியுறுத்தல்

Published On 2023-08-04 14:40 IST   |   Update On 2023-08-04 14:40:00 IST
  • ஆலை ரூ.800 கோடிக்கு மேல் கூட்டு நஷ்டத்தை சந்தித்துள்ளது.
  • ஒட்டுமொத்த நிலத்தை விற்றாலும் ரூ.800 கோடி கடனை அடைப்பது சாத்தியமான விஷயம் அல்ல.

புதுச்சேரி:

ஏ.ஐ.சி.சி.டி.யூ. அகில இந்திய துணைத் தலைவர் சோ. பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஏ.எப்.டி. பஞ்சாலை மிகப்பெரிய அளவில் நிலச்சொத்துள்ள நிறுவனம். இந்த ஆலை ரூ.800 கோடிக்கு மேல் கூட்டு நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதற்கு முழு பொறுப்பை மத்திய, மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும். இந்த கடன்களை அடைக்க நிலங்களை விற்க அரசு ஒப்புதல் அளித்துள்ள தாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்த நிலத்தை விற்றாலும் ரூ.800 கோடி கடனை அடைப்பது சாத்தியமான விஷயம் அல்ல. நிலம் கைவசம் இருந்தால்தான் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க முடியும். பட்டானூரில் உள்ள 56 ஏக்கர் நிலமும் முக்கியமான நிலம். கடன்களை அடைக்க சொத்துக்களை விற்பது என்ற கொள்கை முடிவு தற்கொலைக்கு ஒப்பானது.

எனவே கடன்களுக்கு மத்திய அரசிடம் நிதி பெற சிறப்பு சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும். ஆலைக்கு சொந்தமான சொத்துக்களை விற்கக்கூடாது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News