புதுச்சேரி

வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஓய்வறையில் அமர்ந்திருந்த காட்சி.

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Published On 2023-02-18 14:51 IST   |   Update On 2023-02-18 14:51:00 IST
  • வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • புதுவையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 பிப்ரவரி 19-ந் தேதி காவல் துறையினரால் வக்கீல்கள் தாக்கப்பட்ட தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி வருவதால், தமிழகம் மற்றும் புதுவையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, புதுவையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். மூத்த வக்கீல்பக்தவச்சலம் மற்றும் 15 நீதிமன்றங்களை சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News