புதுச்சேரி

கோப்பு படம்.

அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்துவது சட்ட விரோதம்-அன்பழகன் பேட்டி

Published On 2023-08-26 13:28 IST   |   Update On 2023-08-26 13:28:00 IST
  • அ.தி.மு.க, கட்சி கொடி என எதையும் இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்த கூடாது.
  • அ.தி.மு.க.வையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறாக விமர்சனம் செய்த யாருக்கும் கட்சியில் இடமில்லை.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க பொதுக்குழு தொடர் பான வழக்கில் இதுவரை 9 முறை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க தலைவர் ஸ்டாலினை மகிழ்விக்க எத்தனை முறை நீதிமன்றத்திற்கு சென்றாலும் நீதி தேவதை துணையோடும் ஜெயலலிதா ஆசியோடும் அதனை எங்களது பொதுச் செயலாளர் முறியடிப்பார்.

சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு, பெஞ்சு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் 11.7.2022-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் உறுதி செய்யப்பட்ட பிறகும் அ.தி.மு.க, கட்சி கொடி என எதையும் இனிமேல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பயன்படுத்த கூடாது.

இது சம்பந்தமாக ஏற்கனவே புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் டி.ஜி.பி, மற்றும் தேர்தல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.விற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் மீண்டும் மீண்டும் எங்கள் கட்சியின் பெயரையோ, கொடியை யோ, சின்னத்தின் குறியீட்டையோ, விளம்பர பதாகை கள், துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது சட்டவிரோத செயலாகும்.

இவர்கள் மீது காவல்துறையும், தேர்தல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.வையும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறாக விமர்சனம் செய்த யாருக்கும் கட்சியில் இடமில்லை. அப்படி விமர்சனம் செய்யாத அடிமட்ட தொண்டன், பிறருடைய தவறான துர்போதனைக்கு ஆளாகி துரோகிகள் கூட்டத்திற்கு சென்றிருந்தால் அவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் பொதுச் செயலாளர் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள முடிவெடுப்பார்.

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

Tags:    

Similar News