கோப்பு படம்.
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என்பதை ஏற்க முடியாது
- முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் ஆவேசம்
- ஒருங்கிணைப்பாளரின் காலில் விழுந்து தனது ஆட்சியை காப்பாற்ற மன்றாடிய எடப்பாடி பழனிசாமி இப்போது ஏளனம் பேசுவது ஏற்புடையதல்ல.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய தொண்டர்க ளால்தான் அ.தி.மு.க. உருவானது. அ.தி.மு.க.வின் அடிப்படை அஸ்தி வாரத்தையே அபகரித்து தனது சுயநலத்திற்கு பயன்படுத்த முயற்சிக்கும் சுயநல கூட்டத்தின் முயற்சியை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு, மூத்த நிர்வாகிகள் துணையோடு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சின் மீட்கும் முயற்சி வெற்றி பெறும்.
ஒருங்கிணைப்பாளரின் காலில் விழுந்து தனது ஆட்சியை காப்பாற்ற மன்றாடிய எடப்பாடி பழனிசாமி இப்போது ஏளனம் பேசுவது ஏற்புடையதல்ல. இவர் தலைமையேற்று சந்தித்த 9 தேர்தலிலும் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
ஆனால் 9 முறை நீதிமன்றத்தில் வெற்றி பெற்றதாக மார்தட்டிக் கொள்வது மக்கள் மன்றத்தில் தோற்று போனதை மறைக்கும் செயலாகும்.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சை பொறுத்த வரை தொண்டர்கள் தான் கட்சியின் ஆணிவேர் தொண்டர்களின் முடிவே எங்கள் முடிவு. தொண்டர்க ளுக்காகத்தான் இயக்கம் என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்த கொள்கை கோட்பாடுகளை மையமாகக் கொண்டு திகழ்ந்து வருகிறார்.
மூல வழக்கு நிலுவையில் உள்ள போது கொடியையும் சின்னத்தையும் இவர்கள்தான் பயன்படுத்த வேண்டும் அவர்கள்தான் பயன்படுத்த வேண்டும் என்று எந்த ஒரு தீர்ப்பிலோ தேர்தல் ஆணையமோ இதுவரை சொல்லவில்லை.
இந்த நிலையில் தனது தேவைக்காக சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் காலில் விழுந்த அரசியல் வியாபாரிகள் கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த கூடாது என்று ஜெயலலிதா வழிவந்த உண்மை தொண்டர்களிடம் கூறுவதை நிறுத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான ஓ.பி.எஸ். கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து எனது தலைமையில் புதுவை விசுவாசிகள், நிர்வாகிகள் செயல்படுவார்கள்.
இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.