புதுவை சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
நர்சிங் கல்லூரிக்கு அனுமதி பெற்ற பிறகே கலந்தாய்வை நடத்த வேண்டும்
- சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தல்
- நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சென்டாக் மாணவர்-பெற்றோர் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டையில் நடந்தது. சங்க தலைவர் நாரா யணசாமி, பொருளாளர் வி.சி.சி.நாகராஜன் தலைமை தாங்கினர். கூட்டத்தில் நீட் தேர்வில் 720-க்கு 700 மதிப் பெண் எடுத்த புதுச்சேரி மாணவர் அசோக்குமார் கவுரவிக்கப்பட்டார்.
சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பாக சங்க நிர்வாகிகள், பெற்றோர், மாணவர்கள் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்தனர்.
கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் மருத்துவம் படிக்க உள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டணம் உயர்த்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மாநில மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்கள் முறைகே டாக படிப்பதை தடுக்க வேண்டும்.
சென்டாக் மூலம் தேர் வாகும் அனைத்து மாணவர்களுக்கும் காமராஜர் கல்வி நிதியுதவியை வழங்க வேண்டும்.நர்சிங் படிப்புக்கான கலந்தாய்வு இந்திராகாந்தி மருத்துவ கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது. 2023ம் ஆண்டிற்கான நர்சிங் கல்லூரிக்கு அனுமதி பெற்ற பிறகே கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நிர்வாக இட ஒதுக்கீட்டிலும், மாநில மாணவர்களுக்கு 85 சவீத இட ஒதுகீடு வழங்குவது போன்று புதுச்சேரியிலும் நிர்வாக ஒதுக்கீட்டில் மாநில மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னர் மற்றும் முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.