புதுச்சேரி

கோப்பு படம்.

ஆதிதிராவிடர் வாரிசுதாரர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

Published On 2023-07-05 08:06 GMT   |   Update On 2023-07-05 08:06 GMT
  • மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
  • சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த வாரிசுதாரர் பணிகள் உடனடியாக நிரப்பப்பட்டன.

புதுச்சேரி:

புதுவை மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் சமூக நலத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையில் மட்டும் கடந்த 30 ஆண்டு காலமாக பணியில் மரணம் அடைந்த ஊழியர்களின் வாரிசுதா ரர்களுக்கு வழங்க வேண்டிய அரசு பணி வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது.

ஆட்களை நிரப்பும்போது ஒவ்வொரு முறையும் 5 சதவீத வாரிசுதாரர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த வாரிசுதாரர் பணிகள் உடனடியாக நிரப்பப்பட்டன. ஆதிதிராவிட நலத்துறையில் மட்டும் நிரப்பவில்லை.

எனவே ஆதி திராவிட நலத்துறையில் வாரிசுதாரர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். டெபுடேஷன் மூலம் பணி செய்யக்கூடியவர்களை அந்தந்த துறைக்கு அனுப்பி விட்டு ஆதிதிராவிடர் நலத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News