புதுச்சேரி

பாகூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

மருத்துவமனைக்கு கூடுதல் ஆம்புலன்ஸ் வசதி- செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஏற்பாடு

Published On 2023-04-06 05:14 GMT   |   Update On 2023-04-06 05:14 GMT
  • புதுவை அருகே பாகூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
  • இதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி:

பாகூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இதன் மூலமாக, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகூர் தொகுதி தி.மு.க., செந்தில்குமார் எம்.எல்.ஏ. முயற்சியால், புதுவை ரிவாஜ் ரவுண்ட் டேபிள் 104, 41 இ.ஆர்.எஸ்., லெஸ்கோப்பெய்ன் 192 மற்றும் பிரான்ஸ் தமிழர்கள் சேவை சமூகம் ஆகியவை சார்பில், பாகூர் மருத்துவமனைக்கு புதியதாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டது.

இதனை பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் முரளி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கொடியசைத்து ஆம்பு லன்ஸை பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில், ரவுண்ட்டேபிள் இந்தியா தேசிய செயலாளர் சந்தோஷ்ராஜ், விஜயரா கவேந்திரா, சுஜெய், குணல், விஷ்ணுபிரபாகர்பிரவேஸ் ஜெயின், சார்லஸ் டேனியல், பிரேம்ராஜ், சுரேஷ் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாகூர் ஜமுனாரவி தொகுப்புரையாற்றினார். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை டாக்டர் ஆனந்தவேலு நன்றி கூறினார்.

Tags:    

Similar News