புதுச்சேரி

மக்கள் கலந்தாய்வு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் பொதுமக்கள் மனு கொடுத்த காட்சி.

குடிநீர் வழங்க நடவடிக்கை-ஏம்பலம் செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவு

Published On 2022-11-19 11:38 IST   |   Update On 2022-11-19 11:38:00 IST
  • மணவெளி தொகுதிக்குட்பட்ட தானம்பாளையம் சப்தகிரி நகர், வெங்கடேஸ்வரா நகர், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் துரித நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

புதுச்சேரி:

மணவெளி தொகுதிக்குட்பட்ட தானம்பாளையம் சப்தகிரி நகர், வெங்கடேஸ்வரா நகர், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் தெரிவித்த குறைகளையும் கருத்துக்களையும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கேட்டறிந்தார்.

குறிப்பாக இப்பகுதிகளில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இப்பகுதிகளுக்கு கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது எனவும் மழைக்காலம் முடிந்தவுடன் கழிவு நீர் வாய்க்கால் வசதி மற்றும் தார் சாலை வசதி அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.

மேலும் தானாம்பாளை யம் சப்தகிரி நகர் பகுதியில் குடிநீர் கலங்களாக வருவதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக அப்பகுதியில் ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் துரித நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி ரெட்டி யார், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News