புதுச்சேரி

கோப்பு படம்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

Published On 2023-07-03 14:55 IST   |   Update On 2023-07-03 14:55:00 IST
  • விடுதலை சிறுத்தைகள் மனு
  • முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழ்வாணன் ஆகியோர் கட்டண வசூல் குறித்து புகார் அளித்தனர்.

புதுச்சேரி:

புதுவை அரசின் இலவச கல்வி அரசாணைக்கு விரோதமாக தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கல்வி கட்டண குழு முதன்மை அதிகாரியும், முன்னாள் நீதிபதியுமான பாரதிதாசன் முன்னிலையில் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.

விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ பொழிலன், முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழ்வாணன் ஆகியோர் கட்டண வசூல் குறித்து புகார் அளித்தனர்.

தொடர்ந்து தனியார் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பிடமும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த நீதிபதி, தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் அரசாணைக்கு விரோதமாக கட்டணம் கேட்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.

தனியார் பள்ளிகளுக்கான புத்தக கட்டணம், சீருடை கட்டணம் ஆகியவற்றை கல்வி கட்டண குழு உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தேவபொழிலன், அமைப்பு செயலாளர் தலையாரி, தமிழ்வாணன், துணைச் செயலாளர் சிவச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

இந்த சந்திப்பி ன்போது திருபுவனை தொகுதி செய லாளர் ஈழவ ளவன், நிர்வா கிகள் தவசி, சரவணன் ஆகியோர் உடன் இருந்த னர்.

Tags:    

Similar News