புதுச்சேரி

கோப்பு படம்.

செல்போன் சிக்னலை தடுக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Published On 2023-07-05 13:38 IST   |   Update On 2023-07-05 13:38:00 IST
  • சிறைத்துறை ஐ.ஜி. எச்சரிக்கை
  • அலைவரிசையை அதிகப்படுத்துவதால் சிறைச்சாலையில் செல்போன் சிக்னல் கிடைக்கிறது. சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்து வருகிறோம்.

புதுச்சேரி:

புதுவை காலப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் செல்போன் அலைவரிசை கிடைக்காத வண்ணம் அலைவரிசையை தடுக்கும் டவர் கருவி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிறையில் சிறை ஊழியர்கள் செல்போன் சிக்னலை பரிசோதனை செய்யும் போது அவ்வப்போது சிக்னல் வருவதாக புகார் தெரிவித்தனர். எனவே சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங்சாகர், அனைத்து செல்போன் நிர்வா கத்தையும் காலாப்பட்டு மத்திய சிறைக்கு அழைத்து விளக்கம் கேட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

சென்னை உயர்நீதிமன்றம், புதுவை அரசும் சிறையில் செல்போன் அலைவரிசை கிடைக்காத வண்ணம் செல்போன் நிறு வனங்க ளுக்கு உத்தரவிட்டுள்ளது. அலைவரிசையை அதிகப்படுத்துவதால் சிறைச்சாலையில் செல்போன் சிக்னல் கிடைக்கிறது. சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்து வருகிறோம்.

சிறை கண்கா ணிப்பாளர் கடந்த 15-ந் தேதி சிறையில் பரிசோதனை செய்யும் போது இரு செல்போன்கள் கைப்பற்றப்பட்டு காலப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒரு சில காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்கள் செல்போன் அலைவரிசை சிறையில் கிடைக்காத வண்ணம் உறுதிப்படுத்த வேண்டும். மறுபடியும் அலைவரிசை கிடைத்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் பல்வேறு செல்போன் நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News