புதுச்சேரி

கோப்பு படம்.

அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை

Published On 2023-06-06 05:21 GMT   |   Update On 2023-06-06 05:21 GMT
  • ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் எச்சரிக்கை
  • உயர்கல்வி கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட சில கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரி:

எஸ்.சி., எஸ்.டி. கல்வி ஊக்கத்தொகை குறித்த ஆலோசனைக்கூட்டம் லாஸ்பேட்டை பிப்மேட் அலுவலகத்தில் நடந்தது.

உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அமீன்சர்மா தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சாய்.ஜெ.இளங்கோவன், அனைத்து கல்லூரி அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நலத்துறை இயக்குனர் சாய்.ஜெ. இளங்கோவன் பேசும்போது:-

கல்லூரிகளில் இருந்து வரும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப் படுவதில்லை. இதனால் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

உயர்கல்வி கட்டணக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட சில கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எழுத்துப்பூர்வ புகார் பெறப்பட்டால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கல்லூரிகளிலும் நோடல் அதிகாரியை நியமிக்கவேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. ஊக்கத்தொகை விண்ணப் பங்கள், சந்தேகங்களுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது, ஆய்வு செய்வது குறித்து விளக்கம் தரப்பட்டது.

Tags:    

Similar News