அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி.
அரிச்சுவடி மனநல மையத்தில் உறுதிமொழி ஏற்பு
- பெண்கள் காப்பக்கத்தில் ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி தலைவர் சீனிவாசன் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
- அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தொகுதி மணவெளியில் உள்ள அரிச்சுவடி மனநல மையத்தில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஆண்கள் காப்பகத்தில் டாக்டர் அரவிந்தன் தேசியக்கொடி ஏற்றினார். பெண்கள் காப்பக்கத்தில் ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி தலைவர் சீனிவாசன் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
மேலும் நோயாளிகளுக்கு கேக் வெட்டி வழங்கப்பட்டது. மன நோயாளிகள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் கலை
நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி முன்னாள் தலைவர் சதீஷ் குமார், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் டாக்டர் சத்தியவண்ணன், ஜெயக்குமார், வக்கீல் பரிமளம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் அரிச்சுவடி டிரஸ்டி அரசமாதேவி ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.