புதுச்சேரி
கோப்பு படம்.
கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்
- புதுவை கோர்ட்டு உத்தரவு
- போலீசார் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (வயது 32). இவர் அந்த பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு கஞ்சா விற்ற போது ஒதியன்சாலை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஆயிரத்து 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு போதைப்பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றமான புதுவை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
அரசுத் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் விநாயகம் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முகேஷுக்கு 7ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார்.