புதுச்சேரி

காய்கறி கடையில் பணம் திருடிய முருகனையும் அவரை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

காய்கறி கடையில் புகுந்து பணம் திருடிய வாலிபர் சிக்கினார்

Published On 2023-07-14 13:55 IST   |   Update On 2023-07-14 13:55:00 IST
  • யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் காய்கறிகடை யின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்செ ன்றிருப்பது தெரியவந்தது.
  • போலீசார் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்த முருகனை பிடித்து விசாரணை செய்தனர்.

புதுச்சேரி:

திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43).

இவர் மதகடிப்பட்டு தனியார் திருமண மண்டபம் அருகே காய்கறி கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் காய்கறிகடையில் கல்லாபெ ட்டியில் ரூ.30 ஆயிரத்தை வைத்து பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது காய்கறிகடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை காணாமல் திடுக்கிட்டார்.

யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் காய்கறிகடை யின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்செ ன்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து சரவணன் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த திருட்டில் கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த முருகன் (41) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

அவரை நோட்டமிட்ட போலீசார் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் மது குடித்துக் கொண்டிருந்த முருகனை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது காய்கறி கடையில் பணம் திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 11ஆயிரத்து 400 பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News