புதுச்சேரி

கோப்பு படம்.

முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்தி குத்து

Published On 2023-09-03 06:25 GMT   |   Update On 2023-09-03 06:25 GMT
  • படுகாயமடைந்த பிரதாப் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து சாரதியை தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை ஆம்பூர் சாலையில் பிளாட்பார பகுதியில் வசித்து வருபவர் அமுதா. இவரது மகன் பிரதாப்(வயது20). இவருக்கும் புதுவை ஆட்டுப்பட்டியை சேர்ந்த சாரதி என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் பிரதாப் செட்டி தெருவில் உள்ள அரசு நிதி உதவி பெரும் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாரதி பிரதாப்பிடம் தகராறு செய்தார்.

பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதாப்பின் கையில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.

இதில் படுகாயமடைந்த பிரதாப் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.

இதுகுறித்து பிரதாப்பின் தாயார் அமுதா பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாரதியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News