புதுச்சேரி

அன்பழகன்.

உயிரோட்டமான உன்னதமான பட்ஜெட்-அ.தி.மு.க. கருத்து

Published On 2022-08-24 11:51 IST   |   Update On 2022-08-24 11:51:00 IST
  • தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை புதுவை அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.
  • அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று அரசின் மாதாந்திர உதவி பெறாத 21 வயதிலிருந்து 55 வயது உள்ளவரை உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ. ஆயிரம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள பட்ஜெட் மீதான கருத்தில் கூறியிரு ப்பதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை புதுவை அ.தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.

கடுமையான நிதி நெருக்கடியிலும் முற்போக்கு சிந்தனையுடன் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.ஆயிரத்து 684 கோடி வெளிக்கடன் வாங்கி கொள்ள அனுமதி அளித்தும் முதல்-அமைச்சர் ரூ.525 கோடி மட்டுமே கடன் பெற்று மாநிலத்தின் பொருளாதார நிலையை கட்டுக்குள் நிலைநாட்டியுள்ளார்.

அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று அரசின் மாதாந்திர உதவி பெறாத 21 வயதிலிருந்து 55 வயது உள்ளவரை உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ. ஆயிரம் அறிவித்துள்ளது. பாராட்டுதலுக்குரிய அற்புதமான திட்டம் ஆகும். அனைத்து பிராந்தியங்களும் சம வளர்ச்சி அடையும் விதத்தில் காரைக்கால், மாகி, ஏனாம், புதுவை பகுதிகளில் அடிப்படை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த இந்த பட்ஜெட் ஏழை, எளியோருக்கான, மாநில உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான, உயிரோட்டமுள்ள உன்னதமான பட்ஜெட்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News