புதுச்சேரி

போராட்டத்துக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிவா, சம்பத், செந்தில் குமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்த காட்சி.

தொழிற்சாலையில் தொடர் விபத்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

Published On 2023-11-05 08:43 GMT   |   Update On 2023-11-05 08:43 GMT
  • எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்
  • பெரிய விபத்து நடந்தும் அரசும், அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பது வேதனை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது.

புதுச்சேரி:

காலாப்பட்டு தொழிற்சாலையில் நேற்றிரவு பாய்லர் வெடித்த விபத்தில் காயமடைந்து தொழிலாளர்கள் 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் தொழிற்சாலை வாயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் நடந்த இடத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில்

எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா நிருப ர்களிடம் கூறியதாவது:-

காலாப்பட்டில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. 40 பாய்லர்கள் செயல்படும் அந்த தொழிற்சாலையில் 2 பாய்லர்கள் வெடித்ததற்கே இவ்வளவு சேதாரம் ஏற்பட்டு இருக்கிறதை பார்த்தால் மனம் பதறுகிறது.

ஆனால் இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் அரசும், அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பது வேதனை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது.

இதுகுறித்து கலெக்டர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கெமிக்கல் கழிவுகள் எல்லாம் கடலில் கலந்து நீர் ஆதாரம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதாலும், ரசாயன கழிவு வெளியேறுவதாக தகவல் வருவதாலும் மக்கள் அங்கு அச்சத்துடன் வசிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அரசு கண்காணிப்பில் இருந்தும் இதுபோன்ற தவறுகள் நடப்பதை இனியும் அனுமதிக்க கூடாது.

தொழிற்சாலையை சுற்றி 10 மீனவ கிராம மக்கள் வசிக்கின்றனர். பல்கலைக் கழகம், நவோதயா பள்ளி, சிறைச்சாலை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இதை யெல்லாம் அரசு கவனத்தில் கொண்டு, தொழி ற்சாலையை முழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட வேண்டும். இந்த கோர விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலா ளர்களுக்கு அவர்கள் வேலை செய்த மற்றும் செய்ய வேண்டிய நாட்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் அத்தொழிற்சா லையை திறப்பதாக இருந்தால் அப்பகுதி மக்களின் எண்ணங்களை அறிந்து அதற்கு தகுந்தா ர்போல் அரசு முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு சிவா கூறினார்.

Tags:    

Similar News