புதுச்சேரி
கோப்பு படம்.
சென்டாக் அதிகாரிகளிடம் நீதி விசாரணை நடத்த வேண்டும்
- மார்க்சிஸ்டு வலியுறுத்தல்
- முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மீது புதுவை அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரி நிறுவனங்களுக்கு ஆதரவாக சென்டாக் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறோம். ஊழல், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மீது புதுவை அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாணவர் சேர்க்கையில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளுக்கும் சென்டாக் அதிகாரிகளும், புதுவை அரசும் தான் காரணம். எனவே உடனடி யாக சென்டக் கன்வீனர், சென்டாக் அதிகாரிகள் மற்றும் புதுவை அரசு மீது ஒய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.