புதுச்சேரி

கோப்பு படம்.

பட்டபகலில் துணிகரம் டிரைவர் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை

Published On 2023-10-18 13:30 IST   |   Update On 2023-10-18 13:30:00 IST
  • 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசு, ரூ.13 ஆயிரத்து 500 ரொக்கபணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது
  • வீடு புகுந்து நகை பணம் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி:

புதுவை அடுத்த பாகூர் திருமால் நகரை சேர்ந்தவர் இந்திரகுமார் (40). இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா (31) கடலூரில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகின்றார். இவர்களுக்கு 2 பிள்ளைகள். நேற்று காலை கணவன் - மனைவி 2 பேரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுகன்யா, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ திறந்து பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த 1¼ பவுன் தங்க நகை, 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசு, ரூ.13 ஆயிரத்து 500 ரொக்கபணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து சுகன்யா இந்திரகுமாரிடம் தெரிவித்தார்.

அவர் பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோவில் பதிவான கைரேகை தடயங்களை சேகரித்தனர். வழக்கமாக சாவியை வைத்து செல்லும் இடத்தை நோட்ட மிட்டவர்கள் தான் கைவ ரிசை காட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து இந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டபகலில் வீடு புகுந்து நகை பணம் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News